பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 I மெல்ல, 'தான் என்னும் விதை, நாம் என்னும், செடியாக முளைக்கிறது. மெய்யன்பு, இயல்பான அன்பு. ஈரம் உள்ள அவர்களது வாழ்க்கை செடியாக நிற்பதில்லை-மரமாகத் தழைக்கிறது. குழந்தைகள் என்னும் கிளைகளைப் பெறுகிருர்கள். ஒருயிரைப் பற்றிய கினைப்பு, ஈருயிரைப் பற்றிய .சிங்தனையாக முளைத்து, சில உயிர்களைப் பற்றிய கருத்துக்களாகக் கிளேத்து, அதற்கிடையில் பெற்ற .பட்டறிவின் பயனக, கால முழுமையில், பல்லுயிர் ஒம்பும் அறகைக் கணிகிறது. (இல்லறம், இயல்பாக கடத்தப்படும் போது, முறையாக கடத்தப்படும் போது, அதற்கு வேராக அமையும் அன்பு என்னும் :பண்பு, அறன் என்னும் பயனேத் தானகவே தரும். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. என்பது குறள், அது எக்காலும் உண்மை. எல்லோர்க்கும் உண்மை. எனவே பொய்யாமொழி. இப்படிப் புகன்ருர் காவலர் பாரதி.