பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**** எழுப்பவல்லது எத்தனே கற்பனைகளில் சிறகடித்துப் பறப்பார்கள் நம் தம்பிகள். மலர்க்கொடி யாக எண்ணி ஏங்குவார். ஒருவர். மின்னம் கொடி யினைப் பற்றப் பதறுவார் வேருெருவர். ‘கவிதைக் கனி பிழிந்த சாற்றினே, காதல்" வெய்யிலே காயவைத்து ஆக்கியமேனியினேப் பெறத் துடிப்பார் மற்ருெருவர். இத்தகைய கனவுகள், கற்பனைக்குச் சுவை, வாழ்க்கைக்குத் துணேயாமோ? தயக்கம் ஏன்? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்து,. வாழ்ந்து, உலகப் பொதுமறையை ஈங்த வள்ளுவப் பெருங்தகையைக் கேட்போம் வாரீர். மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. என்று அறுதியிட்டுக் கூறுகிருர். வள்ளுவர் கருத்தினுள் நுழைந்து மெய்ப்பொருள் காண்போம். தம்பி! நீ, பட்டினத்துப் பேருங்து கிலேயத்திற்குச் செல் கிருய். கிலேயமோ பெரியது. அங்கிருந்து புறப்படும். வண்டிகளோ பலப்பல. அவை போய்ச் சேரும் ஊர்களும் வெவ்வேறு. எனவே, நீ போகும் ஊருக் கான வண்டி எது என்று உனக்குத் தெரியவேண்டும். என்ன செய்வாய்? கிலேயத்தை நெருங்கும் போதே, 'கல்லூர் வண்டி எப் பக்கம் என்று கேட்பாய். அவருக்குத் தெரியாவிட்டால் அடுத்தவரைக் கேட்பாய். யாரோ ஒருவர், செல்லவேண்டிய பேருந்து,