பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வண்டியின அடையாளங் காட்டுவார். அவ்வுதவி .யினல், கேரே, உன் ஊர் வண்டியில் ஏறுவாய். அவ் வண்டியினைக்காட்டியவர் உனக்குத் துணைபுரிந்தவரே. தேவைப்பட்ட போது துணை புரிந்தவரே. அவர் .யாரோ, என்ன பேரோ, அறியாய். அவற்றைக் கேட்கவுமில்லே ர்ே. ஏன்? அங்கொடிக்கே துணையாகக் கொண்டீர் அவரை. அடுத்த நிமிடம் அவரது துணை தேவையில்லே. எனவே அவரைப் பற்றிக் கேட்டறி .யாமல், போகும் போக்கிலே, விரைந்து விட்டீர். உரிய பேருந்து வண்டியிலே ஏறி அமர்ந்தீர், ர்ே. சில கிமிடங்கள் கழிந்தன. மற்ருெருவர் ஏறினர். உம் பக்கத்தில் அமர்ந்தார். வா’ என்பதற்கு அடையாளமாக, நீர் புன்முறுவலும் பூக்கவில்லை. 'அம்புறம் போ' என்பதற்கு அறிகுறியாக, முகத்தைச் .சுளிக்கவும் இல்லை. - அன்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. இருவருக்கும் இடையில் இருந்தது, இங்கிலேயே. இப்படியே மேலும் சில கிமிடங்கள் உருண்டு ஓடின. "அப்பாl என்ன புழுக்கம்! இவ்வாண்டாகிலும் மழை பெய்யப் போகிறதோ இல்லையோ?” என்று அங்கலாய்த்துக் கேட்கிறீர். பக்கத்திலிருப்பவரும் உங்களுடன் அங்கலாய்ப்பில் கலந்து கொள்ளுகிரு.ர். விட்டும் தொட்டும் உரையாடல் நீள்கிறது. பக்கத்துப் பயணி, தம்மூரில் இறங்கும் வரை பேச்சு ள்ேகிறது. பலப்பல பொருள் பற்றி பேச்சு. ஆயினும் மனங்கலங்த பேச்சல்ல. எனினும், பிரியும்போது, ‘எங்கள் ஊர்ப்பக்கம் வங்தால் என் வீட்டிற்கு வந்து