பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 鹭± = Ho - H H o FI = போக மறந்து விடாதீர்கள் என்று உபசாசரம்: பரிமாறிக் கொள்வீர்கள். இதுவே உலகியல் மரபு. அடையாளம் காட்டியவர் விடிைத்துணை. எனவே, யாராயினும் சரியே. பக்கத்திலிருந்து. பயணஞ் செய்தவர் பேச்சுத் துணை. அவ்வளவே. அதுவும் நுனிப்புல் பேச்சுத் துணை. ஆகவே ஆழ்ந்த நண்பராகத் தேவையில்லே. இருவரில், எவரும் நெடு நாள் துணையாகவில்லை. எவரையும் உம் தொழி' லிற்கோ வாழ்க்கை நடவடிக்கைகளுக்கோ பங்காளி யாக்கவில்லை. ■ கொடிப் பொழுது, துளித்துணைக்கும் சில கிலோ மீட்டர் பயணத் துணைக்கும் எடைபோட்டு ஆள் தேட வேண்டாம். கண்டதும் கேட்கலாம் முந்திய தற்கு. பக்கத்தில் இருக்க நேர்ந்த யாரையும் இரண்டொரு மணிகளுக்குப் பேச்சுத் துணையாக்கிக். கொள்ளலாம். சாதாரண விழிப்போடு நடந்து. கொண்டால், தீங்கொன்றும் நிகழ்ந்து விடாது. மனைவி, விடிைத் துணையா? அல்ல. வெறும் , பேச்சுத் துணையா? அல்ல. பின் அவள் யார்? ஒருவன் ஒருத்தியை மணந்து, இல்லறம் கடத்து வதே, வாழ்க்கைத் துணையாதல் என்று நம்முடைய பெரியோர் அழைத்தனர். எ ன வே, மனேவி, வாழ்க்கைத் துணைவி. ஒருவரது இல்லறம், கல்லற மாக கிடப்பது, அவர் எத்தகைய துணைவியைப் பெறுகிருர் என்பதைப் பொறுத்தது. அது எங்த