பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அடிப்படையில் துணை தேடுகிருர் என்பதைச் சார்ந்தது. == மனைவி, மனேக்கு உடையவள். மனேயை கடத்து பவள். மனையை, மாண்புற நடத்துவதன் மூலம், கணவனுக்குத் துணை நிற்பவள். கணவன் மேற் கொள்ளும் ‘காரியம் யாவிலும் கை கொடுக்க வேண்டி கயவள். ஒரு போது அல்ல. சில போது அல்ல. சில ஆண்டுகள் மட்டுமல்ல. வாழ்நாள் முழுவதும் கணவனுக்கு மனப்பூர்வமாக உதவ வேண்டியவள் மனைவி. n குடியானவருடைய மனேயின் சூழலும் அலுவல் .களும் அறைகூவல்களும் ஒரு வகை. அங்கே தேவைப் படும் உதவி ஒருவகை. உழைப்பினே வெறுக்கும் :ஒருத்தி உழவுனுக்கேற்ற மனேவி ஆவாளோ? ஆகாள். நிலச்சுவான்தாரின் மனேயின் சூழலும் பணியும் வேறு. அங்கே தேவைப்படும் உதவியின் தன்மையும் வேறு. அலுவலரின் மனைவிக்குப் பொருந்தும் மாட்சி, காடாள்வோர் மனேமாட்சிக்கு மாறுபட்டது. 'மனை, கணவரின் அலுவல், கிலே, ஆகியவற்ருல் அமைவது. மாடு கன்றுகளே அதட்டிக் காக்கும் பொறுப்பினை உடைய குடியானவரின் குரலும் குண மும். இனிக்கச் சொல்லவேண்டிய தூதுவரின் மனேக்குப் பொருந்தா. அலுவலும் கிலேயும் மாறக் கூடியவை. எனவே மனையின் மாண்பும் மாறக்கூடியவை. மனே மாண்பின் மாற்றத்திற்கேற்ப, மனவியும் மாண்பும் ஓரளவு