பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI தனி மனித் சீலத்தை, குடும்பனின் பொறுப்பை, சமுதா யனின் கடமைகளே உணர்த்துவது. திருக்குறள் நுண்மை யான கருத்துகளே. மென்மையான சொற்களால் தெளிவு படுத்துவது. சிறு சிறு சொற்களால், கேட்டார்ப் பிணிக்கும் வகையில் அறங்கூறும் நீதி நூல், திருக்குறள். இது சறுக்கு கிலேயில் ஊன்று கோலாக உதவும். அது மட்டுமா? அயர் வினைப் போககி, ஊக்கத்தை ஊட்டி, உயர்வினைக் கொடுக்கும். திருக்குறளின் சிறப்பினை உணர்ந்த மேனுட்டு நல்லறி, குர் ஒருவர். திருக்குறள் போன்ற அற(ஒழுக்க) இலக் கியத்தை கான் கண்டதில்லை என்று போற்றிஞர். அப் படிப் போற்றிய கல்லறிஞர் யார்? அவர் க்ால்ஞ்சென்ற, டாக்டா ஆலபாட சுவைடசா எனபார் அவர், சமயக் கணக்கர்; தத்துவப் பேரறிஞர்; பல கற்ற பேரறிவாளர்; உயிர்க் கருனேயே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த சான் ருேர், அவர் சான்ருேர் மட்டுமா? இல்லை. செயல்பட்ட சான்ருேர். காடுகளுக்கிடையே அரைநூற்ருண்டு மருத்து வத் தொண்டாற்றிய சிலர். உலகப் பெருஞ்சாதனையாளர் களிலே ஒருவர். மக்கள் இனத் தொண்டிற்காக் கோபெல் பரிசு பெற்ற அறவோர். பல கற்ற அப்பெரியார் நம் திருக்குறளே இப்படி மதிப்பிட்ட்ார். நாம் அலட்சியப் படுத்தலாமா? ஆகாது. திருக்குறளைக் கற்கவேண்டும்; ஆழ்ந்து கற்கவேண் டும்; சிந்தித்துப் பொருள் காணவேண்டும். புதுப் புதுக் கோணங்களில் கண்டு உணரவேண்டும். திருக்குறள் நெறியை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளவேண் டும். அவ்வழி நடக்கவேண்டும். சளேக்காது, சலிக்காது. நகரவேண்டும். நம்பிக்கையும் உறுதியும் கொண்டு தொடர்ந்து முன்னேறவேண்டும். என்னே ஆளாக்கிய நன்னூல் திருக்குறள். என்னை மனிதனுக்கியது திருக்குறள். வேற்றுமையற்ற மனிதப் பெருங்கட லில் என்னே இணைத்து வைத்திருட்பது, திருக் குறள். என் கோய் மறந்து, பிறர்நோய் உணர்ந்து, தொண் டாற்ற வைப்பது திருக்குறள். எனவே, திருக்குறள் பால் எனக்குத் தனியாக காதல் உண்டு.