பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அமர் றவேண்டும். மாற்றம் சோர்வினைக் கொடுத்தால் அவள் நல்ல மனைவியாகாள். (குடியானவருடைய வருவாய் ஓரளவு. எனவே அவரது குடும்பச் செலவும் அதற்குள் கட்டுப்பட வேண்டும். இதை அறிந்து குடும்பத்தை கடத்தத் தெரியவேண்டும் வாழ்க்கைத் துணைக்கு. ஆயிரக் கணக்கில் சம்பளம் வாங்கியபோது செய்தபடியே, விரிவான செலவைப் பென்சனர் மனைவியான பிறகும் செய்தல், நல்ல மனைவியின் இலட்சண மாகாது. வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்யக் கற்றவளே, நல்ல வாழ்க்கைத் துணையாகும்.) எனவே, மனைவியைக் கொள்ளக் கருதும் நம்பி, மனேவி என்ற பெயரால் வாழ்க்கைத் துணையை-தம் வாழ்வின் சம பங்காளியை-ஏற்றுக் கொள்ளப் போவதை உணரவேண்டும். வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளப் போகிருர் என்பதையும் சிங்தித்து முடிவு செய்து கொள்ளுதல் வேண்டும். இத்தகைய வாழ்க்கை வாழ வேண்டுமென்று முடிவு செய்துகொண்ட பின்னரே, அவ்வாழ்க்கைக்கு ஏற்ற இயல்புகளையும் மாண்புகளையும் உடைய ஒருத்தியைத் தேர்ந்து எடுக்க இயலும். (மனேக்குத் தக்க மாண்பினையும்,வளத்திற்குத் தக்க செலவினையும் D GUDL - ILI மனைவியும், தன்னைத்தான் காத்துக் கொள்ளும் வலிமையும் துணிவும் ஊக்கமும் உடையவ ளாக இருத்தல் வேண்டும். அப்போதே துணை; இல்லையேல் சுமை.'மலர்க்கொடி"கள் சுமை’. தன்னைக் காத்துக் கொள்வதோடு கிற்கலாமா? புறத்திலே