பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இன்பத்திலும் துன்பத்திலும் சம பங்கு ஏற்றுக் கொள்வதாகவே பொருள். ஊரறிய உரைத்தாலும் உரையாவிடினும், இதுவே பொருள். கணவனும் மனேவியும் இல்லறம் கடத்து கிருர்கள். ஆயினும் நாடகத்தில், நிழற்படத்தில் காணும் காட்சிகள் எதுவும் இல்லை. இருவரும் குடும்பச் செல்வங்கள். எனவே அமைதியாகவே கடங்து கொள்கிருர்கள். இருவருக்குமிடையே எவ்வளவு அன்பு என்று ஊரார் அறிந்து கொள்ள முடியவில்லை. தாமரை இலத் தண்ணிரோ என்று ஐயுறவும் இடமுண்டு. பண்பிலே வளர்ந்தவர்கள் அன்ருே புறப் படபடப்பினேக் காணுேம். அன்பினை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. மனைவிக்கு பேறு; முதற் பேறு. பேறுகாலம் நெருங்கிற்று. மருத்துவமனையில் சேர்ந்துள்ளாள். கணங்தோறும் கண்ங்தோறும் எதிர் பார்த்திருக் கின்றனர். கணவன் தாழ்வாரத்தில் காத்துக்கொண் டிருக்கிருன். கவலே தோய்ந்த கண்கள். ஏக்கம் நிறைந்த முகம். மனேவியின் நோயைப் பங்கிட்டுக் கொள்ள இயலுமா? இயலாது. அதை அ றியாத வனல்ல கணவன். எனினும் மனம், கிலே கொள்ள வில்லை. நல்லபடியே பெற வேண்டுமே என்று துடிக் கிறது அவன் நெஞ்சம். அதோ, அவன் தாயார் வெளியே மெதுவாக வருகிரு.ர். r