பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. "ஆமப்பா எழிலி, வேதனை தாளாது துடிக் கிருள். ஆயினும் கவலைப்பட வேண்டாம். மருத்து வரும் தாதியும் அருகில் உள்ளனர். எத்தனேயோ பேறுகளுக்கு மருத்துவம் பார்த்தவர்கள் அவர்கள். "எல்லாம் சரியாகவே இருக்கும் என்று உறுதி கூறுகிருர்கள்’’ என்று தாயார் அறிவிக்கிருர். தாயார் கூறிய செய்தி கணவனின் கண்ணிரைத் தோண்டு கிறது. அடக்க முடியவில்லை. கண்ணிர் சொரிந்து விடுகிருன். 'நல்லபடியே நடக்கட்டும் என்று வேண்டிக் கொள்வாயா! இப்படிக் கண் கலங்கலாமா? என்ன ஆகிவிட்டது. எல்லாம் சரியாகவே கடக்கும்’ என்று தாயார் தேற்றுகிருர். அப்போது தன் ஆண்மை அகன்றதை எண்ணி, வெட்கப்படுகிருன் கணவன். அவன் மறத் தமிழன். ஆண்மையாளன். அன்று வரை அச்சமறியாக் காளே. அதுவரை உறுதியாக வாழ்ந்துவங்த அவன் உள்ளத்தை உருகச் செய்தது எது? அன்பு, மனைவியின்பால் கொண்டிருந்த அன்பு. அதைத் தடுப்பது எப்படி? முடியாது; முடியாது. வேண்டிய்வர்கள் துன்பப்படும் போது, அன்புப் பெருக்கைத் தாளிட்டு அடைக்க முடியாது. அந்த அன்புப் பெருக்கே, மனேவி படும் வேதனையைப் பற்றிக் கேட்டதும் கண்ணிராக வங்தது. இதை அடைக்கும் தாள் இல்லை. இதை, அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும். என்று நயம்படச் சுட்டிக் காட்டுகிருர் வள்ளுவப் பெருங்தகை.