பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அதோ காளை மாடு, திடலில் படுத்துக் கிடக் கிறது. படுத்தபோது வெயில் உறுத்தவில்லை. இப்போது, சுளிர் என்று உறுத்துகிறது. ஆயினும் காளை அதைப் பொருட்படுத்தவில்லை. அசையாமல் படுத்துக் கிடக்கிறது. முடியாமல் அல்ல. தாங்கும். தன்மையால். இதோ நெளிகிறதைப் பாருங்கள். இப்புழு எத்துணேத் துடிக்கிறது. புழுவிற்கு எலும்பு இல்லை. எனவே தாங்கும் தன்மை இல்லை; வெய்யிலேத் தாங்கும். தன்மை இல்லை. காளேக்கு எலும்பு உண்டு. வலிவான எலும்புண்டு. எனவே அதே வெய்யிலைப் பொருட் படுத்தாதிருக்க முடிகிறது. புழு பெருத தாங்கும் தன்மையை எருது பெற்றிருப்பது எலும்பின் துணை யால். அன்பு செறிந்த இல்லறம் எதையும் தாங்கும். அன்பு கலவாத மனேக்குடியிருப்பு எதையும் தாங்காது. துடிக்கும். இவ்வுண்மையை வள்ளுவர் உணர்த்து கிருர். கேளுங்கள் அக்குறளே: என்பில் அதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். இக் குறள் மூலம், 5ம் வாழ்க்கையில் அன்பு ஈரம் தேவை என்பதை வலியுறுத்துகிருர் வள்ளுவர். உழுதுண்டு வாழும் பெரு மக்களே! ஈரம் பற்ருத நிலம், ஈரம் காக்காத நிலம் என்ன வாகும்? பாறையாகும். அங்கே புல் பூண்டுகள் முளைப்பதே அரிது. செடியும் மரமும் வளர்வது அரிதினும் அரியது. அத்தகைய கடும் பாறைகளில்