பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

பட்டமரத்தை கட்டுத் துளிர்க்க வைக்க இயலுமா?

ஆகாது; ஆகாது. ... " பட்டமரத்தை பாறையில் வளர்க்க முயல்வது எப்படி பயனற்ற முயற்சியோ அவ்விதமே, நெஞ்சிலே அன்பு ஈரம் பற்ருது, அன்பு ஈரம் காக்காது வாழ்தல் பயனற்றதாகும். அத்தகைய வாழ்க்கை தழைக்காது. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை, வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. என்று தெளிவு படுத்துகிருர் பொய்யா மொழியார். எனவே, கம் வாழ்க்கை தழைக்க, பிறவிப் பயன் கைகூட, அன்பு செய்வோம்: ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செய்வோம். அன்புணர்ச்சி, நற்செயல்களாக உருப் பெற வேண்டும். தன் குடும்பத்திற்கும் அப்பால் பரவும் அன்பு ஈரம், விருந்தோம்பும் பண்பாக மலருதல் இ ய ல் பு. ஏ. தோ மிச்சமிருந்தால், போடுவது விருந்தல்ல. தம்மிடம் உள்ள உணவை மிக உயர்ந்த தாக இருந்தாலும் புதிதாக வந்தவர்களோடு பகிர்ந்து உண்டலே விருந்து எனப்படும். சாவா மருந்து கிடைக்கக்கூடியதா? இல்லை. ஆனல் விரும்பப்படுவது. பெரிதும் விரும்பப்படுவது. அத்தகைய, கிடைத்தற் கரிய, தேடப்படும் சாவாமருங்தைக் கூட விருங் தினருக்குத் தெரியாமல் தானே உண்பது, தள்ளத் தக்கதாகும். சாவா மருங்தையும் விருந்தினரோடு பங்கிட்டு உண்பதே, மனிதப் பண்பாகும். விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று. என்று குறள் நெறி அழுத்திக் கூறுகிறது.