பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இக் குறளேயும் இங்கே நினைவு கூர்தல் நல்லது. அன்புசேர் இல்லறம் மேற்கொண்டு, விருங் தோம்பி, பகுத்துண்டு பல்லுயிரையும் காக்கும் அன்பு நெறி, அறநெறி, அருள்நெறி தழைக்குமிடத்தில், பசியேது; பட்டினியேது? துயர் ஏது? கூக்குரல் ஏது? கொங்தளிப்பு ஏது? வன்கண்மை ஏது? சாங்தியால் உலகம் தழைக்க விரும்புவோர் எல்லாம், வள்ளுவர் காட்டும் ந்ெறி பற்றுவார்களாக. அறநெறி கடப்பார்களாக. அருள் மழை பெறுவார் களாக. காங்தி நூற்ருண்டில், சாந்தி கி ல வ, என்றென்றும் சாங்தி நிலவப் பாடுபடுவதென்று உறுதி கொள்ளுங்கள் அன்பர்களே! என்று வேண்டினர், பாரதியார்.