பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களையுடையது இங் நூல். இதன் பத்தாம் அதிகாரம் இனியவை கூறல் என்ற தலைப்பைக் கொண்டது. அடுத்த அ தி கா ர ம் .ெ ச ய் நன்றியறிதல். அதற்கு அடுத்ததோ நடு நிலைமை’. இம் மூன்றையும் இணைத்து எண்ணிப் பார்ப்பது பொருத்தமாகும். ஏன்? மனிதனின் முப்பெரும் பண்புகள் சொல், செயல், சிங்தனே ஆகும். சொல்லின் சிறப்பு இனியவை கூறலால் விளங்கும். செயலின் சிறப்பு செய்நன்றி யறிதலால் சிறக்கும். சிங்தனையின் செம்மைக்குச் சான்று நடுவு நிலைமையாகும். -- தனியே வாழாமல், வீட்டில், காட்டில், மனிதர் களின் நடுவில் வாழும் ஒவ்வொருவரும், காள்தோறும் பலரோடு பழக நேரிடுகிறது. செய்தி சொல்ல வேண்டியதாகிறது. பதில் சொல்ல நேர்கிறது. வேண்டுகோள் விடுக்கும் நெருக்கடியும் ஏற்படுகிறது. செய்தியை எப்படிச் சொல்ல? துரக்கி எறியவா? வீசவா? பதிலே பளிச்சென்று கன்னத்தில் அறைந்தாற் போல் சொல்லவா? வேண்டுகோளை அதட்டிக் கேட்கவா? மிரட்டிக் கேட்கவா? மனிதருக்கு மனிதர் அன்புடையவராகி, இனிமை யாகப் பழகுவதே மனிதத் தன்மையின் சிகரம். அதை எட்டவே எல்லோரும் பாடுபட வேண்டும். ஒப்புக்குக் காட்டும் அன்பும், நடிப்பு இனிமையும் ஓர் வகை. செய்யன்பும் ஆழ்ந்த இன்சொலும் மற்ருேர் வகை. பிந்தியதே நமக்குத் தேவை.