பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 குள த்தின் ர்ேமேல் பாசிபடர்ந்தால் பச்சென்று இருக்கும். அப் பாசியை எளிதில் கையால் விலக்கி எடுத்து விடலாம். குளத்தில் தாமரை தழைத்தாலும் பச்சென்று இருக்கும். அதுவோ ஆழ ஊன்றியிருப்பது. ஆகவே, அதை எளிதாக ஒதுக்கிவிட முடியாது.-- அது போல, நம் இன்சொல், ஆழ்ந்த அன்பின் சரத்திலிருந்து தழைக்க வெண்டும். ஆழ ஊன்றிய இன்சொல்லை. எளிதில் அப்புறப்படுத்த முடியாது. அதைப் பெறும் வழியென்ன? இதோ வழி! எல்லா மக்களிலும் மறைந்திருக்கும் செம்பொருள் ஒன்றே என்பதை உணர்ந்த காட்சி வேண்டும். இனியவை கூறல் என்ற அதிகாரத்தின் முதற்பாவிலேயே இதை நினைவுபடுத்திய வள்ளுவர், மேலும் வழிகாட்டுவதைக் காண்போம். உலகம் அதிகம் ஏங்குவது பொருட்கொடையை விட அன்புக்கொடைக்கும் புன்சிரிப்புக்குமே. மக்கள் இனம் பொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் சில காலம். ஆனால், இன்சொல் வறுமையைத் தாங்காது உலகம். உலகியலேயும் உளவியலேயும் நன்கு அறிந்த வள்ளுவர், அகத்து அன்பின் விளைவாக ஈகை வெளி வங்தாலும், முகமலர்ச்சியோடு இன்சொல்லாடுவதே மக்களை அதிகம் மகிழ்விக்கும் என்பதை அடுத்த குறளில் காட்டுகிரு.ர். வாரி வாரி வழங்கிய பிறகும் பிறர் உள்ளங்களைக் கொள்ளைகொள்ள முடியாத வறியர்களைப் பலபோது .காண்கிருேம். சிறிதே கொடுத்தாலும், பலரது உள்ளங்களைக் கவர்ந்து வைத்திருப்போரையும் காண்