பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கிருேம். ஏன் இங்கில? எவ்வளவு கொடுத்தார் என்பதைவிட எப்படிக் கொடுத்தார் என்பதிலேயே இருக்கிறது கவர்ச்சி. எனவே, முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தாளும் இன்சொலினதே அறம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். நம்மைக் காட்டிக் கொடுப்பன கண்கள். கண் நோக்கினும் இனிமை தேவையென்பதை உணர்த்திய பொய்யா மொழியார், எப்படிப் பட்டவர்களிடமும் இனிமையாகவே பழகுபவர்க்கு, வறுமைத் துன்பம் வராது என்பதை, துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறுஉம் இன்சொ லவர்க்கு என்னும் குறட்பாவால் கற்பிக்கிருர். வறுமை யென்பது சமுதாயம் கைவிட்டதால் ஏற்படும் கிலே யன்ருே? இனியவனைக் கைவிடுமா சமுதாயம்? விடாது. செல்வச் சிறப்பு சட்டத்தால் மறையும். செல் வாக்கு ஒளி, பொது மக்களால் மாறும். ஆனல் பணிவான பண்பிற்கு யாரே உச்சவரம்பு கட்ட முடியும்? நிலைத்த ஆதாயமாகிய பணிவுடைமை இயற்கையாக விளைவதல்ல. அது, அணிகலனேப் போல், பொறுமையாகத் திறமையாக உருவாக்கப் பட வேண்டியதாகும். அணிகலகை ஒப்பும் பொன் கட்டி, உருக்கவும், அடிக்கவும், ட்ேடவும், தறிக்கவும் ஆட்படுகிறது. இத்தனைக்கும் பிறகே அது அணி கலகை ஒளி விடுகிறது. அதைப்போல காமும்: