பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 எத்தனை துன்பத்தைத் துய்த்தாலும் பணிவுடையராக உருப்பெற, உறுதி கொள்வோமாக. ஒளி விடுவோ LDIT<55 மலருக்கு மணம்போல, பணிவுடைமைக்கு இன் சொல். கட்டை வண்டியைக் கூச்சலின்றியும் ஒழுங் காகவும் ஒட்ட உதவும் கீல்போல, ஈருருளிக்கு இடும் எண்ணெய்போல, இயங்திரங்களுக்கு ஊற்றும் வழ வழப்பான தனி எண்ணெய் வகைபோல, இன்சொல், மக்கள் வாழ்க்கை வழ வழப்பிற்குத் தேவை. இதையும் முயன்று பயின்று கொள்வோமாக. மேலும் தொடர்ந்தது, காவலர் உரை. இன் சொற்கள், அறத்தை வளர்க்கும்: அல்லதைத் தேய்க்கும். இங்கே தேய்க்கும் என்ற சொல்கயத்தை நினைவு கூர்தல் நல்லது. i. இனிமையாகக் கூறல் இரு சாரார்க்கும் இன்பத். தையும் நன்மையையும் விளைவிக்கும். இதை எடுத்துக் கூறும் வள்ளுவர், வாழைப் பழத்தில் ஊசியேற்றுவது போல் ஓர் எச்சரிக்கையையும் விடுகிரு.ர். இனிக்கப் பேச வேண்டும். அதற்காக எதையும் பேசலாமா? சிறுமையானவற்றைப் பேசலாமா? சிறுமையான சுவைப் பேச்சுகளில் இறங்கிவிடலாமா பண்பாளன்? கூடாது. ஏன்? சிறுமை பேச இறங்கி" ல்ை, பின்னல் மதிப்பிழந்து இரங்க நேரிடும். கசப்பைத் தேக்கிக் கொள்ளாமல் எல்லோரிட மும் கலகலப்பாகப் பேசுபவர் இன்பம் பெறுவதைக் கண்டும், பேதையர் சிலர் வன்சொல் வழங்குவதைக் கண்டு கண்ணிர் வடிக்கிருர் வள்ளுவர். அகக் காட்சி