பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிகளில் சிறந்தது, மனிதப் பிறவி. சிறங்த, இம் மனிதப் பிறவியும் தீது இல்லாத கன்றுடையது. அல்ல. மனிதன் ஒர் கலவை. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் ஆன மனிதனுள், நல்ல தன்மைகளும் அல்ல. வையும் கலங்து உள்ளன. எவ்வேளையில் எது தலை துாக்கி கிற்கும் என்று கூறுவது அரிது. காலத்தின் கைப்பாவையாக மட்டும் இருக்கப் பிறந்தவன் அல்லன் மனிதன். இடையருத நீண்ட முயற்சியால் நல்லியல்புகளே வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தன் முயற்சியும் ஆன்ருேர் ஆதரவும் தேவை.