பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அரும்பாடுபட்டு, மெல்ல மெல்ல வளர்க்க வேண்டிய கல்லியல்புகளில் ஒன்று செய்நன்றியறிதல். செய் நன்றியறிதல், இயற்கை விளைவல்ல. பாடு பட்டுப் பயிரிட வேண்டிய நுட்பப் பயிர். எவ்வளவு பெரியவரும், எவ்வளவு செல்வரும், எத்தனே கோடி மக்களின் மேல் ஆணை செலுத்த வல்லாரும் பிரறது உதவியின்றி அங் நிலைக்கு வந்து விடவில்லை. தாயின்றேல் காமில்லை. நம்மைப் பெற்று வளர்க்கத் தாய்பட்ட பாடு செய்யாமற் செய்த உதவி. தாயின் உதவியோடு நின்றதா? இல்லை. ஒவ்வொருவர் வாழ்நாளிலும், ஒவ்வொரு நாளும், நாம் பிறர் உதவியைப் பெற்றே வாழ்கிருேம். அவற்றிலே இரண்டொன்றே, நாம் முன்னே செய்ததற்குப் பதிலாகச் செய்யப்படும் உதவி. பெரும்பாலானவை செய்யாமற் செய்த உதவி. காலமெல்லாம் பலரும் செய்யும் உதவியே, மனித சமுதாய வாழ்க்கைக்குத் துணே. இயற்கைப் பொருள்களாகிய-துணைகளாகியவையகமும் வானகமும் உதவி செய்கின்றன. அவற்றைவிடப் பெரிய உதவி, மக்கள் இனத்திலே இருந்து பெறும், செய்யாமற் செய்த உதவி. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது. என்ற குறளால் செய் நன்றி அறிதலே நினைவுப் படுத்தத் தொடங்குகிருர் வள்ளுவர். மக்கள் இயல் அறிந்தவர் வள்ளுவர். நேற்று செய்ததை இன்று மறந்துவிடும் இயல்பினர், மக்கள்.