பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

பருமனை அளவுகோலாகக் கொண்டு மயங்கி விடும் இயல்பினர் மக்கள். இது தெரியும் வள்ளுவருக்கு. கம்மைத் தெளிவுபடுத்த முயல்கிருர்.

காலத்தினுற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. என்று எடுத்துரைக்கிருர். நோயாளி ஒருவர் உயிரோடு போராடிக் கொண் டிருக்கிருர். அங் நெருக்கடியில் அவருக்கு வேண்டியது , மாமருந்தொன்று. மூன்று ரூபாய் விலையானதே. கடுகளவே ஆன அம் மருந்து, அப்போது கிடைத் தால் பிழைத்துக் கொள்வார். யாரோ பதுக்கி வைத்துள்ள அதை எவர்ோ எடுத்துவந்து வழங்கு கிருர் நோயாளி பிழைக்கிருர். அது, காலத்திற் கிடைத்ததால் அல்லவா அவரது உயிரை மீட்டுத் தங்தது? அவ்வுதவியின் மதிப்பு அம் மருந்தின் அளவிலா? விலையிலா? சிறியதாயினும், காலத்தில் கிடைத்ததால் பெருமதிப்பு. உதவி சிறிதெனினும், உயிர் மீட்ட உதவியாகை யால், நாம் வாழும் ஞாலத்திலும் மிகப் பெரியது என்கிருர் வள்ளுவர். அதைக் கொடுத்தவர், பதிலுக்கு நாம் என்ன செய்வோமென்று கருதிச் செய்யும் அறவிலே வாணிக ரல்லர். அப்படிப்பட்ட, பயன்துாக்கார் செய்யும் உதவியால் உலகம் நடங்து கொண்டிருக்கிறது. அத்தகையோரின் உதவியை எண்ணிப்பார். அதன் கன்மை கடலேவிடப் பெரிதாகும் என்று உணர்த்து கிருர் வள்ளுவர்.