பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 முடியும் என்று கொதிக்கிற உள்ளத்தை உணர்வார் வள்ளுவர். அவர் கொடுக்கும் பனிக் கட்டியையும் நெற்றியில் வைத்துக் கொள்வோம். கொன்றன்ன இன்ன செயினும் அவர் செய்த ஒன்று கன்று உள்ளக்கெடும். இப் பனிக்கட்டி வெப்பத்தை ஒரளவு கட்டுப் படுத்தவே உதவும். மருந்தே தணிக்கும். நன்றி யறியா, மானிட கோயைத் தீர்க்கும் மாமருங்தை உட்கொள்வோம் வாரீர். எங்கன்றி கொன்ருர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு. இது வரட்டுக் கொள்கையல்ல. வாழ்க்கை முறை. இதை உணர்வோம். நன்றியறிதல் எனும் நுட்பப் பயிரை விழிப்பாகப் பயிரிடுவோம். உணவுப் பொருள் களே பருவங்தோறும் பயிரிடுவதாலே, உணவு பெற்று, உயிர்வாழ முடிகிறது. அவ்வண்ணமே நாள்தோறும் நன்றி அறிதலைப் பயிரிட்டு, கல்வாழ்வு வாழ்வோமாக. மனித வாழ்வு வாழ்வோமாக. வாரச் சொற்பொழிவு தொடர்கிறது.