பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு பகல் சேர்ந்ததே நாள். ஒட்டம், கிற்றல், கலங்ததே வாழ்க்கை. இயக்கம், ஒடுக்கம், சேர்ந்ததே முழு வாழ்வு. இயங்க வேண்டிய நேரத்தில் இயங்கவும் ஒடுங்கி கிற்க வேண்டிய நேரத்தில் ஒடுங்கி கிற்கவும் அறிவதே அறிவு. இரண்டிற்கும் உரிய இடத்தை, சுணங்காமல் வழங்குவதே மானிட அறம். இவ்வுலகியல் அடிப்படையைத் தெளிந்தறிந்த வள்ளுவர், செய் நன்றியறிதலே, பத்துப் பாக்களில் வற்புறுத்தினர். மூட்டிய நெருப்பு அடுப்பிற்குள் இயங்கினல், தீங்கு குறை. அது திறங்த வெளியில் எரிங்தால், எத்தனைத் தீங்கும் விளையலாம். செய் நன்றியறிதல் என்கிற தீயை மூட்டிவிட்ட திருவள்ளுவர், அதை நடுவு கிலேமை’, எனும் அடுப்பி லிட்டு தீதிலாப் பயன் பெற விழைகிருர். எனவே