பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 இன்றைக்குப் போடும் மதிப்பீடு நாளைக்கு நிற்ப தில்லை. பல நாட்கள் போட்ட எடையும் பல்லாண்டு களுக்குப் பின்னும் சரியாக இருப்பதில்லை. நீண்ட காலத்தின் கணக்கே உண்மையானது. எதையும் எப்படியும் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் பெருமைச் செறிவு - கால நீளத்தில் நடுவு நிலைமை யற்றவர் என்பதைக் காட்டிக் கொடுத்து விடும். அன்று மாளாப் பழி வங்தெய்தும். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும். என்னும் குறளை நினைவிற் கொண்டு நடுவு கிலேம்ை யோடு ஒவ்வொருவரும் இயங்க வேண்டும். ஏன்? உலகத்தில், நல்லவர் கேடும், அல்லவர் உயர்வும் இல்லாததல்ல. இருப்பின் என்? உடைங்த பொற் குடமும் ஒளிவிடுவது போல, நடுவு கிலேமை தவருமை யால், கேடுற்றவர்கள், குன்ருது, அதிக நாள் ஒளி விடுவதைக் காணலாம் என்பதைப் படம் பிடித்துக் காட்டும் வள்ளுவர், நடுவு நிலைமை தவறி, தவறு செய்ய நினைக்கும் ஒவ்வொருவரும், நான் கெடப் போகிறேன்’ என்ப தற்கு முன்னறிவிப்பு அங்கிணைப்பு என்று எச்சரிக்கிரு.ர். இதோ அக் குறள். கெடுவல்யான் என்பது அறிக தன்நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின். அடுத்த குறளையும் கேட்போம்.

  • = கெடுவாகவை யாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.