பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஆம். தாழ்வை - எப்போதாவது ஒரு முறையாவது ஏற்றவர்களே ஒவ்வொருவரும். பலரது தாழ்வைக் கண்டு மகிழ்கிறது உலகம். சிலரது தாழ்வைக் கண்டு கண்ணிர் வடிக்கிறது. அதே உலகம் காரணம்? பிங்தியவர்கள் அறநிலை தவருமையாலே தாழ்வுற்றவர்கள். அத் தாழ்வை பெருமையாகவே கொள்ளும் உலகம். உலகியலே அறிந்த வள்ளுவர், மானுடம் முழுமைக்கும், பொது நெறி காட்டுகிருர். அதையும் கவனிப்போம். எடை போடத் துலாக்கோல். அது மற்ற வற்றை எடைபோடப் பயன்பட வேண்டுமென்ருல், அதற்கு ஒர் அடிப்படைத் தகுதி தேவை. அது என்ன? துலாக்கோல் எடைபோடுவதற்கு முன்பே, கீழ் மேல் சாயாமல், சமநிலையில் நிற்க வேண்டும். மக்கள் செயல்களே, எடைபோட வேண்டிய, கிலேயிலுள்ள சான்ருேர்கள் சிலர் உண்டு. அத்தகை யோர், துலாக்கோல் போல் ஒரு தலைப்பட்சமின்றிப் பணிபுரிய வேண்டும். சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்ருேர்க் கணி. இக் குறளேக் கற்றுணர்ந்த நாம், பார்ப்போர்க்கும் மட்டும், கேட்போருக்கும் மட்டும் - நடுவு நிலைமை யாளராகத் தென்படும் சாமார்த்தியத்தை நம்பி யிருந்து விடப் போகிருேமென்று ஐயப்பட்டாரோ என்னவோ? வள்ளுவர் மேலும் கூறுகிருர்,