பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னர் கண்டறியாத புது நகரம். மொழியும் பழக்கமில்லாதது. யாரைக் கேட்பது? எம்மொழியில் கேட்பது? துணையோ இல்லை.நெடுவழியோ வந்துவிட்டோம். ஒரே ஒரு கடிதத்தை நம்பி, புதிய நகரத்திற்கு, யாரும் பழக்கமில்லாத நகருக்கு வங்துவிட்டோமே? எவ்வளவு பெரிய தவறு? இத் தவறிலிருந்து மீள்வதெப்படி? யாரைக் கேட்டாலும் கையை விரித்துவிட்டுப் பறங்தோடி விடுகிருர்களே? ஆம். இருக்காதா? அவர் அவருக்கு அவரவர் வேலையே முதல். எங்கிருந்தோ வங்து, எங்கேயோ உள்ள, எவரையோ தேடும், எனக்கு யாரே உதவ வருவார்? இத்தனே ஆண்டுகள் பட்டறியாத துன்பத்தை, இந்த வயதிலா, இந்த நிலையிலா படவேண்டும்?