பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 காட்டினர். அவர் மொழியும் புரியவில்லை. அங்கிலேயில் கான் தற்குறி. மூன்ரும் கட்டடத்தின் முகப்பிலிருந்த மணியை அழுத்தினேன். பதில் இல்லை; கதவு திறக்கவில்லை. சில நிமிடங்கள் பொறுத்தேன். மீண்டும் மணியை அழுத்தினேன். பயனில்லை. இப்படி ஐந்தாறு முறை அழுத்தியும் கதவு திறக்கவில்லை. தெரு வழியே நால்வர் கடந்துபோவது தெரிந்தது. அவர்களாவது, வழித்துணே நாதர்களாக இருக்கமாட்டார்களா என்ற ஆசையில், விரைந்து சென்று அவர்களே நெருங்கினேன். என்னே கானே அவர்களுக்கு சுட்டிக் காட்டிக் கொண்டு, - ‘இந்தியா’ என்றேன். “காங்கள் செக்கோஸ்லாவியாலிவிருந்து வந்துள் ளோம்” என்று தெளிவாக ஆங்கிலத்தில் பதில் கூறினர்கள். எனக்கு சற்று உயிர் வங்தது. நான் எங்கிருந்து வங்துள்ளேன், யாரைத் தேடி வந்துள்ளேன் என்ப வற்றை அவர்களிடம் கூறினேன். நான் தேடும் முக வரியைக் கண்டுபிடிக்க உதவிசெய்ய முடியுமா என்று பரிதாபத்தோடு கேட்டேன். ஆங்கிலத்தில், நான் பேசியதைப் புரிந்துகொண்ட அவர்கள், 'காங்கள் செக்கோஸ்லாவிய காட்டுத் தொழிற் சங்கத் தலைவர்கள்; இங்கு சுற்றுலா வங்துள்ளோம்: உங்களுக்கு உதவ முயற்சிக்கிருேம்’ எனக் கூறினர்கள்.