பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 இருவர், அங்கேயே எனக்குத் துணையாக நிற்க, மற்றிருவர், முதலில் நான் சென்று திரும்பி வங்த பெரிய கட்டடத்தை நோக்கிச் சென்றனர். ஐந்து கிமிடங்களில் திரும்பி வந்தனர். கான்' கடைசியாகப் பார்த்துவிட்டு வந்த கட்டடமே கான் தேடும் முகவரி என்றனர். H நால்வரும் என்னை அழைத்துக்கொண்டு, அக்' கட்டடத்திற்குச் சென்றனர். அங்கே சுவரில் இருந்த கல்வெட்டைப் படித்ததும், இதுவே நீங்கள் தேடும் இடம் என்று கூறினர். எனக்காக, வெளியே பொருத்தியிருந்த அழைப்பு மணியை நான்கைந்து முறை அடித்துப் பார்த்தனர். பயன் இல்லை. மூடிய கதவு மூடியபடியே இருங்தது. அலுத்துப் போன அங்த செக்கோஸ்லாவிய நண்பர்கள், “எங்களை மன்னியுங்கள்! இதற்கு மேல் என்ன செய்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை. காங்கள் எங்கள் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டும். சாலே மூலையில் கின்ருல், உள்ளுர்க்காரர்கள் யாராவது உதவக்கூடும்’ என்று எனக்கு ஆறுதல் கூறிவிட்டுப் போய்விட்டார்கள். அப்போது இரவு மணி எழு ஆகிவிட்டது. * . என்னை நானே கொங்துகொண்டு, கவலை கெளவிய முகத்தோடு, தளர்ந்த கடையோடு, கான் இறங்கி வந்த இரயில் நிலையத்திற்குத் திரும்பினேன்.