பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 95

அன்பு காட்டினல் அவன்மேலும் ஆர்வம் தோன்றும். தோன்றினுல் அவன்மேல் நட்புக்கொள்ள நேரும். நட்புக் கொள்ளின் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய உள்ளம் விழையும். அவ்வாறு உதவி செய்ய விழைவது அன்புடையார் பண்பாகும். அவர் எவ்வகை உதவியையும் செய்ய முன் நிற்பர். அன்பு இல்லாதவர் தான் தூசு-துரும்பு, பொன்-பொருள், சொல்-செயல் முதலிய எல்லாவற்றையும் தமக்கே உரிமையாகக் கொள்வர். அன்பு உடையவரோ அவைகள் எல்லாவற்றை யும் மட்டுமல்ல தம் உடலையும்-எலும்பையும் கூடப் பிற ருக்கு உரிமையாக்கி உதவுவர்.

ஆகையால் தனக்கு மறம் செய்ய எண்ணுபவன் மேல் அன்பு கொள்வதால் அவனுக்கும் எல்லேயின்றி உதவுவர். அவ்வுதவியால் அவனும் மனம் திருந்து வான். திருந்தி நாளடைவில் நண்பனும் ஆவான். அதனுல் அவன் செய்ய நினைத்த மறத்தையும் கைவிடு வான். ஆகவே மறத்தைப் போக்க அன்பு துணை செய்வ தாகிறது. ‘அன்பின் ஆற்றலை அறியாதவரே அன்பு அறத்திற்குத்தான் துணை நிற்கும் என்பர். துணுக்கமாக அறியின் மறத்தினேப் போக்கும் வகையில் மறத்திற்கும் அந்த அன்பே துணை நிற்பதாகும்.'

கண்ணம்மா பேசினுள் : "தந்தையே, அன்பு எவ் வளவு அரும் பயன்களை விளைவிக்கிறது! உயிரோடு உடலை வாழவைக்கிறது ; தேடிக்கிடைக்காத நட்பைத்

  • . *...*..., ... AASAASAASAASAAAS స్పెషిసె:సె:సెసెసెసెసెసెసెసె:
  • அன்பிலார் எல்லாம் தமக்குரியர் : அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு. * அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் ;

மறத்திற்கும் அதே துணை.