பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வள்ளுவர் வாழ்த்து

அவரது குடும்ப வளத்திற்கு உதவுவார். அத்தகையவர் பலராக அமைந்தால் உதவியின் பெருமையைக் கேட் கவோ வேண்டும் !

இவ்வகையில், விருந்திட்டவன் பெறும் வளத்தை அளவிடாமல் உயர்த்தியும் கூறலாம். "எதிர்பாராது பலர்ாக வந்த விருந்தினரை உண்ணவைத்து, எஞ்சிய உணவை உண்ணுபவனுடைய விளை நிலத்துக்கு அவன் விதையும் இடவேண்டுமோ ?-என்ருர் வள்ளுவத் தந்தை யார்,

கண்ணம்மா கண்ணனைப் பார்த்தாள். கண்ணன் அவள் உள்ளத்தை உணர்ந்தவன்போல் பேசின்ை : கண்ணம்மா, எதிர்பாராது பல விருந்தினர் வந்தால் உன்னுல் உடனே உணவு சமைத்துவிட முடியுமர ?

அவள் : முடியுமே! நல்ல விருந்தின் ரைக் கண்ட மகிழ்ச்சியால் ஒரு நொடியில் முடியாதோ?

அவன் : ஒரு நொடி என்ருல் உண்மையாகவே விர லோடு விரல் கூட்டி நொடிக்கும் ஒரு இமை நேரத் தில் சமைத்து விடுவாயோ ?-என்று கூறி நகைத் தான். --

அவள் : ஏளனமா செய்கிறீர்கள் ? விரைவில் முடி யும் என்பதைத் தான் அவ்வாறு சொல்லுவதுண்டு. தந்தை அவர்கள் விருந்திடுபவர் நிலத்திற்கு விதையும் இடவேண்டுமோ - என்கிருர்களே. அதை, விதை இல்லாமலே பயிர் முளைத்துவிடும் என்ரு கருதினிர்கள்? விருத்து பெறும் பயனின் பெருமையை அவ்வாறு குறித் ததுபோல நான் விரைவை இவ்வாறு குறித்தேன்.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ, விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் ? -