பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வள்ளுவர் வாழ்த்து

ஒரு உதவியும் செய்யாமல் இருக்கவும் தாமே முன்வந்து உதவும் உதவிக்குக் கைம்மாருக கிலத்தில் உள்ள பொருள் களேயும் வானத்தில் உள்ளவற்றையும் கொடுத்தாலும் ஈடு கட்ட முடியாது. பொருளுக்குப் பொருள் என்ற வகை யில் வையகப் பொருளும் வானப் பொருளும் மிகுதியா கப் படலாம். ஆல்ை உதவியவர் கொண்ட உள்ளத்

திற்கு ஈடாகுமோ o

அஃதேபோல் 'இடையூறு நேர்ந்த காலத்தில் பிறர் முன்வந்து செய்த உதவி அளவில் சிறியதாக இருப்பினும் அது நிலவுலகத்தினும் பெரிது என்று மதிக்கத்தக்கது. நில உலகம் மிகப் பெரியதுதான். உதவப்பட்ட பொருள் மிகச் சிறியதாயினும் இடையூற்றை நீக்கிய தன்ருே இடையூற்றுக் காலத்தில் அந்தச் சிறு பொருள் கிடைக்கா திருந்தால் அழிவு நேர்ந்தாலும் நேர்ந்திருக்கும். அழிந்த பிறகு பெரிய நிலவுலகமே கிடைத்துத் தான் என்ன பயன் ? ஆகவே காலத்தால் கிடைத்த பொருளுக்கு முன் நிலவுலகமும் சிறியதாகி

விடும்.

இதுபோன்றே கைம்மாருகிய பயனை நோக்கா தவர் செய்த உதவியின் நன்மையை ஆராய்ந்து பார்த்தால் அது தரும் நன்மை, கடல் தரும் நன்மையினும் பெரியது ஆகும். கடல் பெரியதுதான். மழையையும், முத்து பவளம் முதலிய பொருள்களையும், உப்பையும் எல்லை யில்லாமல் தருவதுதான். ஆயினும், மீண்டும் ஆற்று

ఘొR~ --l.*

  • காலத்தி ல்ைசெய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

  • பயன்துக்கார் செய்த உதவி நயன்துக்கின்

நன்மை கடலின் பெரிது.