பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 - வள்ளுவர் வாழ்த்து

மையை அறவே மறந்து நன்றி மறந்தவர் ஆக நேரிடும்.

செய்நன்றிக் கொலை

ஆம், மக்காள் எது எவ்வாறு ஆயினும் செய் நன்றியை மறத்தல் மட்டும் கூடவே கூடாது. ஏனெ னில் *எந்த நன்மையைக் கெடுத்தவனுக்கும் ஒரு வகையில் பிழைத்து வாழ வழி உண்டு. ஆல்ை, ஒருவர் செய்த உதவியை மறப்பவனுக்கு எவ்வகையிலும் மீட்பே இல்லை. செய்நன்றி மறத்தல் இழிவிலும் இழிவு. செய்நன்றி அறிந்தவரே முழு மக்கள். நீங்கள் முழு மக்களாய் வாழ்க நாளை வருக!

x>>>>>>>

  • எந்நன்றி கொன்ருர்க்கும் உய்வுண்டாம் : உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.