பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வள்ளுவர் வாழ்த்து

இவள் கூட வரும்போது உயிரை எவ்வாறு வைக்க முடியும்; எங்கே வைக்க முடியும் தந்தையே ?'என்று சிரித்தான் கண்ணன். அவளும் மகிழ்ந்தாள். தந்தையும் அவர்கள் உயிரும் உடலுமாய் ஒன்றியிருப் பதை நினைந்து வாழ்த் திர்ை.

மக்காள், உயிரை விட ஒழுக்கம் எவ்வாறு மேம் பட்டதாகும் என்ற எண்ணம் எழலாம். உயிர் உட லோடு நின்று வாழ்நாளைத் தருவது. அந்த வாழ் நாளில் இன்பமும், துன்பமும் நேரலாம். ஒழுக்கமோ இன்பத்தையே விளைவிக்கும். தன்னைக் கொண்டவன் இறந்த பின்னரும் புகழை நிலைநாட்டும். ஒழுக்கத்தால் உயிரும் உடலும் வளம் பெறும். அதனுல் வாழ்நாளும் நீட்டிக்கும். உயிரினல் இவையெல்லாம் இயலாதன. ஆகையால் உயிரைவிட ஒழுக்கத்தையே போற்ற வேண்டும் என்றேன்.

மக்காள், உலகில் போற்றிக் காக்கப்படும் அறங்கள் பல. பலவற்றையும் ஆராய்ந்து அவற்றுள் ஒன்றைச் சிறந்ததாகப் போற்றி அதனை மேலும்.ஆராய்ந்து தேர்ந் தெடுத்தாலும் இறுதியில் உங்கட்குத் துணையாக அமை வது ஒழுக்கமே யாகும். ஆகையால் அந்த ஒழுக்கத்தைக் குறைவில்லாமல் போற்றிக் காப்பீராக ! வருந்தியும் காப்பீராக !'

ஒழுக்கமும் இழுக்கமும்

தந்தையே, ஒழுக்கம் என்பது எதைக் குறிக்கும்?"

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அ.தே துணை.