பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 151

' தந்தையே என் தவற்றை உணர்கிறேன். ஆயி லும், அவர் எல்லை மீறி இகழ்ச்சியாகப் பேசவும், செயல் புரியவும் தொடங்கி விட்டார்."

மகனே, தோண்டும் கிணற்றை அதிகமாகத் தோண்டத் தோண்ட அதிக நீரை, அதிலும் சுவை யுள்ள நீரைத் தந்ததோ அன்றி உன்னைத் தள்ளி உள்ளே இழுத்துக் கொண்டதோ ? பொறுமையின் மேம்பாட்டை அன்ருே நிலம் காட்டும் ! மகனே, உன் உறவினர் நன்மை அல்லாததைத்தான் செய்துள்ளார். ஆலுைம் நன்றல்லது...... y

கண்ணன் : அன்றே மறப்பது நன்று.'

ஆம், பிறர் செய்த எல்லை மீறிய தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் நன்று. அந்தத் தீமையை மறந்து விடுதல் பொறுத்தலைவிடச் சிறந்தது ஆகும்.'

தந்தையே, அவ்வாறே மறந்துவிட்டேன். இன்று நான் இங்கு வராது போளுல் நான் என் வலிமையை அந்த எளியவர் மீது வீசியிருப்பேன்."

வலிமையில் சிறந்த வலிமை

மகனே, உன் வலிமையா ? அது எங்கே இருக் கிறது? நீ தான் பொறுமையின்மையால் அடிபட்டுக் கலங்கிப்போய், வலிமையிழந்து, அமைதி இழந்தன்ருே வந்தாய் பொறுமை கொண்டு கலங்காமல் இருந் திருப்பாயாளுல் உன் வலிமை உரம் பெற்றிருக்கும். மகனே, நீ என்பால் அறிந்த கருத்துக்களிலிருந்து ஒரு

,్చ^^^

  • பொறுத்தல் இறப்பின என்றும்; அதனை

மறத்தல் அதனினும் கன்று.