பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 1.59

அறம் நிகழ்ந்தால்...?

' ஆக்கம் பெருகும் தந்தையே. அறத்தைவிடச் சிறந்த மேம்பாடு இல்லை என்றன்ருே அறிந்துள் ளேன். !!! -

ஆம், அத்தகைய 'அறத்தால் பெறும் மேம்பாட்டை விரும்பாதவன்தான் பிறரது ஆக்கம் கண்டு மகிழாது பொருமை கொள்வான். பிறரது ஆக்கம் கண்டு தாமும் மகிழும் பெருந்தன்மை எங்கே? அது கண்டு மனம் புழுங்கும் சிறுமை எங்கே?

தந்தையே பொருமை கொள்பவன் அறத்தையே வெறுப்பவன் ஆவானே ! தன்னை வேண்டாது வெறுத்த வரை அறம் வருத்துமே! ஆகையால் பொருமை கொண் டவன் அறத்தைப் பகைத்துக் கொண்டவன் ஆவான்."

தப்பாத பகை

ஆம் மகனே, பகைத்துக் கொண்டவனே. அந்தப் பகைக்கு மூலமாவது பொருமை அன்ருே ஆகையால், பொருமையே அவனுக்குப் பகை. இந்தப் பொருமை கொண்டு செய்யும் செயல்களால் பிற பகைவரும் அமையலாம். ஆனலும் அந்தப் "பகைவர் துன்பம் தரத் தவறினாலும் தவறுவர் ; பொருமை என்னும் பகை தவருது. ஆகையால் அந்தப் பொருமையே அதைக் கொண்டவன் கெடுவதற்குப் போதுமான பகையாகும்.

  • அறளுக்கம் வேண்டாதான் என்பான் பிறனுக்கம்

பேணு தழுக்கறுப் பான். * அழுக்கா றுடையார்க் கது.சாலும், ஒன்ஞர்

வழுக்கியும் கேடீன் பது.