பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வள்ளுவர் வாழ்த்து

மகனே, துன்பத்தைத் தப்பாமல் செய்வதுதானே கொடிய பகை. கொடிய பகையை உடனே களைய வேண்டும். இல்லையேல் விரைவில் அது முற்றிவிடும், முற்றிப் போனல் பிறர் பெறும் சிறு உயர்வையும் கண்டு புழுங்கச் செய்யும். பிறரது மேம்பாடு கண்டு புழுங்கு வதில் தொடங்கிய பொருமை பிறர் துன்பம் கண்டு மகி. ழும் அளவிலும் செல்லும். அதனல் பிற யாவரும் ஏழ். மையை அடையக்கூடாதா என்ற வேண்டாத எண்ணம் எழும். அந்த எண்ணமும் முற்றில்ை ஏழ்மை பெற்ற வர்கள் அந்த ஏழ்மையிலேயே துன்புற வேண்டும்; அவர் பிறர் உதவி பெற்று முன்னேறக் கூடாது என்று எண்ணவும் செய்யும். செல்வம் உள்ளவர் மனம் உவந்து ஏழ்மையில் உள்ளவர்க்குக் கொடுக்க முன் வந் தாலும் அதைத் தடுக்கத் தூண்டும். கொடுக்கும் நல்ல உள்ளம் படைத்தவர் தடுத்தலை அறிந்தால் தடுப்பவரது சிறுமை கண்டு வெறுப்பர். தடுத்ததால் உதவியைப் பெருதவரும் வெறுப்பர். இவ்வாறு எல்லோரது வெறுப் பையும் ஏற்பவர் தமக்கு எவர் உதவியையும் பெற முடி யாமல் வாழ்வில் தாழ்வர். அவர் வாழ்வு தாழ்ந்தால் அவரைச் சார்ந்த சுற்றம் என்ன ஆகும் ? *செல்வம் அற்றவர்க்குச் செல்வம் பெற்றவர் கொடுத்து உதவுவதைக் கண்டு பொருமைக் கொள்பவனது சுற்றத்தார் உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாமல் கெடுவர்.

ஒப்பற்ற பாவி

' தந்தையே பொருமை தம்மைவிட்டு நீங்காமல் குடிவைத்துக் கொண்டவர் தோற்றத்திலும் பொலிவு

அற்றவராகத்தான் காணப்படுகிருர்.'

  • * கொடுப் தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுTஉம்

உண்பது உம் இன்றிக் கெடும்.