பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறங்கூறுதல் தீது

முன்னே சொல்லுக ;

பின்னே சொல்லற்க!

மக்காள், இன்று உங்களுடன் உங்கள் உறவினர் வரவில்லையோ ?”

இல்லை, தந்தையே. எனது வேலைகள் சிலவற்றை இன்று அவரே மேற்கொண்டுள்ளார். தங்களைக் கண்டு மகிழ்ந்து தங்கள் வாழ்த்தினைப் பெறவே நேற்று வந் தார். அவர் முன்புபோல் இல்லை. பொறுப்போடு செயல் புரிகிரு.ர். என்னிடம் பேரன்பும், பெருமதிப்பும் கொண்டு பழகுகிருர் வரும்போது அவர் கூறிய இன் னுரைகளை எண்ணி மகிழ்ந்தவாறே வந்தேன்."

மகனே, உன் உறவினரைப் பற்றிய நல்ல செய்தி களை நீ கூறக்கேட்டு மிக மகிழ்கிறேன். நேற்றைய முன் நாள் அவரைப்பற்றிய குறையை நீ கூறக்கேட்டபோது என் உள்ளம் அதை முழுமையோடு ஏற்கவில்லை. ஏனென்ருல் அது பிறரைப் பற்றிய குறை. அதிலும் அவர் இல்லாதபோது சொல்லப்பட்டது. ஆல்ை உனக் குப் பொறுமையூட்டுவதையே அன்று கருத்தாகக் கொண்டிருந்ததால் அதனைச் சுட்டிக் காட்டாமல் விட நேர்ந்தது.' -