பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 171

' தந்தையே, நானும் அமைதியின்மையால் தெளி வற்று அவ்வாறு கூறிவிட்டேன். அஃதொடு நேற்றும் அவரை முன்னர் வைத்துக் கொண்டே அவரைப்பற்றிய குறையையும் குறிப்பாகக் கூறினேன். அவற்றையும் இப்போது நினைந்து வருந்துகிறேன்." -

மகனே, அதுவும் கூடாததே. ஆனல் பிறரது "கண்ணெதிரே கின்று அவரைப்பற்றிக் கண்ளுேட்டமில் லாமல் சொன்னலும் சொல்லுக ; அவர் முன் இல்லாது பின்புறத்தே பயன் கருதாத சொற்களைச் சொல்லாது விடுக! அவ்வாறு கூறப்படுவதுதான் புறங்கூறல் எனப் படும். அது தவறு.

ஒருவருக்கு முன்னே நின்று அவரைப்பற்றிச் சொல்லத் தயங்குபவர்தான் புறத்தே சொல்வர். அதை அவருக்கு முன்னே சொல்லத் தயங்குவானேன்? அந் தத் தயக்கம் தன்னுல் கூறப்படும் குறையில் நேர்மை யில்லை என்பதையன் ருே குறிக்கிறது! நேர்மையில்லாத தைச் சொல்பவன் அறம் அல்லாததைச் சொல்பவன் ஆவான். ஆகையால் புறங்கூறுதல் ஒரு இழிந்த தன்மையாகும். இதல்ை ஒன்று அறியப்படும். 'ஒரு வன் அறத்தைச் சொல்லுகின்ற உள்ளத்தைப் பெருதவன் என்னும் தன்மை, அவன் புறங்கூறுகின்ற இழிந்த தன்மை பால் அறியப்படும்.

இவன் புறங்கூருதவன்

தந்தையே, நான்...... !”

+ கண்கின்று கண்ணறச் சொல்லினும், சொல்லற்க

முன்இன்று பின்ளுேக்காச் சொல். * அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை, புறஞ்சொல்லும்

புன்மையால் காணப் படும்.