பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 183

நெல் எனப்படுவது எது ?" ' உள்ளே மணிபிடித்து முற்றியது.'

அதாவது பயனுள்ளது. மணி பிடிக்காமல் முற்றி யது எது? .

' கருக்காய் என்னும் பதர் தந்தையே.'

அதாவது பயனில்லாதது. மணி போன்று பயன் தராத சொற்களைச் சொல்பவனை எவ்வாறு கொள்ள லாம் ??

' அவனும் பதர்போன்றவனே என்னலாம். மணி யில்லாத நெல்லும் பதர். பயனில்லாத சொல்லும் பதர். நெல்லும் சொல்லும் ஒரு பொருளை உடைமையாலும் இது பொருந்தும் தந்தையே."

ஆம், பயனில்லாத சொற்களை மேலும் மேலும் சொல்கின்றவனே மக்கள் இனத்து மகன் என்று சொல்லு தல் கூடாது. நெல்லுள் பதர்போல் மக்கள் இனத்துப் பதர் என்று சொல்லல் வேண்டும்.'

கண்ணன் : தந்தையே, அத்தகையவர் நிலை மிக இரங்கத்தக்கது. காற்றில் துாற்றப்பட்டு அடுப்புக்கும், குப்பைக்கும் செல்லும் பதரைப் போல ஊராரால் தூற் றப்பட்டுத் துன்பத்திலும் இழிவிலும் தள்ளப்படும் நிலையையன்ருே பெறுவர்.

மகனே, கண்ணம்மா உன்னை குறும்புக் குறிப்புடன் பார்ப்பதை அறிந்தாயா ?”

சிறிது சிந்தித்த கண்ணன் : அறிந்தேன். பயனில் லாத சொற்களைத் தாங்கள் விளக்கும்போது ஆண்களைக்


۔م۔مبہمہم مبہمہحمہہ-۔ب-محے AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS

  • பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்,

மக்கள் பதடி எனல். -