பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 189

தோன்றலாம். வறுமை போகலாம். வறுமை போயிற்றே என்று மீண்டும் மீண்டும் அத்தீமையையே செய்ய முனை வான். அந்த முனைப்பால் அவனது தீச்செயல் வெளிப் படும் ; வந்த செல்வமும் அடியோடு போக, மீண்டும் நிலைத்த வறுமையையே பெறுவான்.'

' தந்தையே, வறுமையை நீக்கப் போய் வறுமை யைப் பெறுவது மட்டுமன்றித் தீய செயல் செய்த பழி யால் துன்பமும் நேர்ந்து விடுகிறது. அதல்ை வறுமை யைப் போக்க விரும்பிய விருப்பம் துன்பத்தை விரும்பிய விருப்பமாக அன்ருே ஆகிவிடும் !”

'மகனே, மக்கள் தம் இயல்போ துளியளவு துன்பத் தாலும் வருந்துவதை விரும்புவதில்லை. அதற்கேற்ப ஒழுகினல் அந்த விருப்பம் நிறைவேறும். உண்மை யாகவே, "துன்பப் பகுதிகளில் எதுவும் தன்னை வருத்து வதை விரும்பாதவன் தீய செயல்களைத் தானும் பிறரிடம் செய்யாது விடுதல் வேண்டும். விடாது போல்ை அவனே துன்பத்தை விரும்பி வரவேற்பவன் ஆவான்.'

நிழலாய்த் தொடரும்

மகனே, தீய செயல் ஒரு பகை. மக்களால் நேரும் பகை மாறவும் மாறலாம். ஆனல், தீவினையாகிய பகை மாருது; குறையாது. *எவ்வகையான பெரிய பகை யைப் பெற்றவரும் அப்பகையினின்று மீள்வர். ஆனால், தீய செயலாகிய பகை தான் நீங்காமல் செய்தவனைத் தொடர்ந்து சென்று அழிக்கும்.

w~ SAASAASAASAASAA AAASAAAS.بہ .........ہب - تہہ · 3>:r::>>>>:వషిసె::

  • தீப்பால தான்பிறர்கண் செய்யற்க, நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.

  • எனப்பகை உற்ருரும் உய்வர் ; வினைப்பகை

வீயாது பின்சென் றடும்.