பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 வள்ளுவர் வாழ்த்து

மகனே, நீங்காமல் தொடர்ந்து சென்று அழிக்கும் என்பது உறுதி. தொடர்ந்து செல்லும் என்பதற்கு உவமையாக நிழலைக் கூறலாம். ஒருவனது நிழல் அவனைத் தொடர்ந்து செல்வதைப் பார்த்திருப்பாயே. நிழல் எவ்வளவு தொலைவு நீண்டாலும் அவளுேடு தொடர்பு அற்றுப் போகாதது. காலடியில் தொடர்பு கொண்டிருக்கும். மறைந்தாலும் காலடிக்குள் மறைந்து நிற்கும். ஒளிவந்த காலத்தில் அங்கிருந்து வெளிப்பட் டுத் தோன்றும். தீய செயலும் அத்தகையதே. ஆகையால் தீய செயல்களைச் செய்தவன் கெடுதல் நிழல் ஒருவனை நீங்காது அவனது காலடியில் தங்கிய தன்மை யைப் போன்றதாகும். ஒளிக்குமுன் நிழல் காலடியினின் றும் வெளிப்பட்டுத் தோன்றுமன்ருே. அஃதே போல் தக்க காலத்தில் அவனது தீய செயல் உடன் வெளிப் பட்டு அவனைக் கெடுக்கும்.'

கேடே இல்லாதவன்

மகனே, வாழ்வில் கேட்டை வரவேற்று வாழ்பவர் இல்லை. எவரும் நன்ருக வாழவேண்டும் என்று விரும்: பியே வாழ்வர். அவ்வாறு, *ஒருவன் தனக்குரிய கன் மையை விரும்பி வாழ்பவளுயின் தீய செயல்களில் எந்தச் சிறிய அளவும் தன்னை நெருங்க விடாமல் நீக்க வேண்டும். ஆகவே, நன்மையினின்று தவருமல் ஒழுக வேண்டும் ; நன்மையிலிருந்து தவறும் செயல்களில் ஈடுபடவே

  • தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வியா தடியுறைந் தற்று. - * தன்னைத்தான் காதலன் ஆயின் எனத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால், • .