பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 203

அவர் முகம் மலர்ந்தார். நாங்களும் உள்ளம் குளிர்ந் தோம். பின் அவர் ஒய்வெடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்துவிட்டு வந்தோம்.' * .

மக்காள், நீங்களே நிறைந்த இல்லறத்தவர். நிறைந்த இல்லறம் இது போன்ற உள்ளம் நிறைந்த கொடையைக் கொண்டதாகும். உள்ளம் நிறைந்த கொடைதான் ஈகை எனப்படும். இதுபோன்று ஒன் றும் அற்ற வறியவருக்கு அவர் விரும்பும் ஒரு பொருளே உள்ளம் உவந்து கொடுப்பதே ஈகையாகும். பிற கொடை கள் எல்லாம் அளந்து கொடுத்துத் திரும்பவாங்கும் பண்ட மாற்றுத் தன்மையை உடையதாகும். o

"தந்தையே, இதன்படி நோக்கினுல் இவ்வகை ஈகை அல்லாத பிற சிறந்தன அல்ல என்று ஆகின்றன. இது கொண்டு எனக்கொரு ஐயம் எழுந்துள்ளது. தந்தையே, என் முயற்சியால் நான் ஈட்டித் தொகுத்துள்ள செல்வத் தைக் கொண்டு ஒரு பொதுநல ஏற்பாடு செய்ய இன்று காலை திட்டமிட்டுள்ளேன். அது இந்த ஈகையில் அடங்குவது ஆகாதே?'

மகனே, நேற்று நீ பெற்ற ஒப்புரவின் விளக்கத்தை நடைமுறையில் செய்ய முனைந்துள்ளாய். அது ஒப் புரவு. இன்று உணவிட்டமை ஈகை. ஒப்புரவு பொது வாகச் செய்வது. ஈகை சிறப்பாகச் செய்வது. ஒப்புரவு காலத்து உதவி அன்று. ஈகை உடனடியான உதவி. ஒப்புரவைப் பெறுவோர் அந்த ஒப்புரவைப் பெருமலே வாழ்ந்துவிட முடியும். ஈகையைப் பெறுவோர் அதனைப்

--- بیستمعام

  • வறியார்க்கொன் lவதே ஈகை மற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.