பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 வள்ளுவர் வாழ்த்து

ரும். அவ்வாறு கேட்டிலும் புகழுக்கு ஈடுபடுவது என்பது எல்லார்க்கும் எளிதன்று. கேட்டைப் பெற்று வளர்த்த புகழை நிலைக்கச் செய்ய வேண்டுமென்ருல் அதற்கு இறக்கும் வரை செயலாற்ற வேண்டும். அத ஞல், இறப்பு நேர்வதாயினும் செயலாற்ற வேண்டும். இஃதும் எல்லார்க்கும் எளிதன்று. அருமையான செயல் திறமையும் மன உரமும் பெற்ருர்க்கே இவைகள் எளியனவாகும். ஆகையால், *புகழின் வளர்ச்சிக்காக நேரும் வாழ்வின் கேடும், புகழ் நிலைத்து சிற்பதற்கு ஆகும் சாக்காடும் அருமையான செயல் திறமையும், மன உரமும் வாய்ந்த வித்தகர்க்கே எளிதாகும் ; அவரல் லாராம் மற்ற வர்க்கு அரிதாகும். -

கண்ணன் தந்தையே, கேடு வளர்ச்சியைத் தரு வதும் சாக்காடு நிலைப்பதும் ஒரு புதுமையே. இப்புது மையால் புகழுடையோரின் சிறப்பை நன்ருக அறிய முடிகிறது. -

புகழோடு வெளிப்படுக! இகழோடு நொந்துகொள்க !

மக்காள், நீங்களும் அத்தகைய சிறப்புடையவராக வேண்டுமன்ருே அதற்கு இல்லறத்தில் எத்துறையி லும் முனைந்து நின்று திறமையாகச் செயலாற்ற வேண் டும். இல்லறம் பலவகைப் பண்புச் செயல்களாகிய துறைகளைக் கொண்டது என்பதை அறிவீர்கள்.

S S S S S SMSSSMSSSMSSSMSSAS SSAS SSAS SSAS SAASAASAASAASAAMAMMSMAMAMMMS

  • நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.