பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வள்ளுவர் வாழ்த்து

கொள்கின்றன. உடம்போடு உயிர் இயைந்து ஒளிர் கின்றது. உயிரிடையே உடம்பு மிளிர்கின்றது. இது போல் அவளோடு நீ ஒளிர வேண்டும்; உன்னிடையே அவள் மிளிரவேண்டும். நான் இடும் சொற்களைக் கவனிக்க : அவளோடு என்றேன்; உன் இடையே என்றேன். அவள் உடன் நிகழ்ச்சிக் குரியவள் ; நீ அந்நிகழ்ச்சிக்கு அடிப்படையானவன். மகனே, உடம் போடு உயிருக்கு இடையே பொருந்தியுள்ள இயற்கையான இயைபு எத்தகையதோ, அதுபோன்று இந்தமடந்தையோடு என்னிடையே இயைந்துள்ளது அன்புப் பிணைப்பு என்று நீ முதற்கண் உணர்க!' என்ருர் வள்ளுவர்.

வைகுந்தம் விரும்பாத கண்ணன்

கேட்ட மகனது முகக்குறி அவனது புத்துணர்வைக் காட்டியது. அவன் நேற்றுவரை குமரன். இன்று இல்லத்தலைவன் பதவிக்கு உயர்ந்திருக்கிருன். காளை என்று திரிந்தவன் கணவன் என்ற பட்டத்தைச் சூடி யிருக்கிருன். அவன் கணவன் என்பதையும் கணவன் மனைவிக்கு எத்தகையவன் என்பதையும் நினைவுபடுத்த எண்ணிஞர் வள்ளுவர்.

மகனே, உன்னைப்போன்ற மைந்தன் ஒருவனை இதுபோது உனது கருத்தில் நிறுத்தலாமென்று கருது கிறேன். உன் மனையாளைப்போல அழகுள்ளவளை மணந்தான் அவன். அவளது தளிர்மேனியும், முத்துப் பல்லும், குவளைக் கண்ணும், அமிழ்தின் இயன்ற தோளும், மதிமுகமும், பனிமொழியும், மனைமாட்சியும்

AASAASAASAASAAAS S SMS SMSMMSSAAAASA SAAAASMSMSASA SSASAS SSAS

  • உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொ டெம்மிடை நட்பு.