பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வள்ளுவர் வாழ்த்து

ஆம் தந்தையே அறிவது மட்டுமன்று : <到高磁 வழி நடப்பதும் எங்களது அரும் நோக்கம் "

பெருநோக்கோடுதான் உங்கள் வாழ்வுப் பயணத்து. தைத் தொடங்குகிறீர்கள் ; நீவிர் வாழ்க ! உங்களது வாழ்வுப் பயணத்திற்குரிய வழி எதுவென்று தெரியுமா ஒரு ஆறு தான் வழி.' -

' தந்தையே...... 4 :

ஆம், மகனே, ஆற்றில் தான் நடக்க வேண்டும். ஆறு என்ருல் நீர் ஓடும் ஆறு அன்று. நீங்கள் கொள்ள வேண்டிய ஆற்றிற்குப் பெயர் அறத்து ஆறு-அறம் என்னும் வழி. ஆறு என்ருல் வழிதானே மகனே !!

ஆம், தந்தையே '

அறவழிதான் வாழ்க்கைக்கு அமைந்த திற வழ, வாழ்வு என்பது புகழையும், பல்வகைச் செல்வத்தையும் நாடித் தவழ்வது அவற்றைச் சேர்க்கவல்லது அறம் ஒன்றே. அதல்ை தான் அறத்தைவிடச் சிறந்த ஆக்கம் ஒன்றில்லை என்று நான் சொன்னதுண்டு. * அறத்தை விடச் சிறந்த வேறு ஒரு பெரும் செல்வம் இல்லை என்று உணரும்போது அந்த அறத்தை மறத்தலே விடக் கேடு வேறு ஒன்றில்லை என்பதையும் உணரவேண்டும்.

ஆகையால் மகனே, அவ்வறத்தை இயன்ற அளவு செய்ய வேண்டும்; தொடர்ந்து செய்ய வேண்டும்; வாய்க்கும் போதெல்லாம் செய்ய வேண்டும். நீங்கள் அவ்வறத்தை இல்லத்தில் இருந்து செய்ய முஜனத் துள்ளவர்கள்." .

zSzSzSeSeSeeeAMAMAMMAMMAAAA ఇషాష:R.

  • அறத்தினூஉங் காக்கமும் இல்லை; அதனை

மறத்தலின் ஊங்கில்ல்ை கேடு.