பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வள்ளுவர் வாழ்த்து

பெப் என்று சொன்னவுடன் பெய்யும் மழை போன்றவள் ஆவாள். வேண்டும்போது மழைபெய்தால் அது எவ் வாறு பயிர் வளத்திற்கு உதவுமோ, அதுபோலக் கற்புள்ள பெண் அவள் கணவனுக்கு வளம் தருபவள் ஆவாள். . - ... . . . கண்ணன் இடையிட்டான் : தந்தையே இதே போன்று மனைவிக்குக் கணவன் மழைபோன்று வளம் தருவான் என்பதை வாழ்வார்க்கு வானம் பயந் தற்று "-என்ற தொடரால் தாங்கள் கூறியது இங்கு என் நினைவிற்கு வருகிறது." ;

கண்னம்மா : தந்தைய்ே அவர் எனக்கு அமிழ்தம் ஆவார். நான் அவருக்குப் பெய்' என்ருல் பெய்யும் மழை ஆவேன். அத்தகைய கற்பைக் கொள்வேன். இவள் தான் பெண் என்று உலகோர் எடுத்துக் காட்டும் தகுதியுள்ள பெண்ணுக வாழ்வேன்.

இவளே பெண்

நன்று மகளே ! கற்பினின்றும் வழுவாமல் தன் னைத்தானே காப்பாற்றிக்கொள்பவள் பெண் ; தன்னை மனையாளாகக் கொண்ட கணவனே உடல் கலமும், உள்ள கலமும் கெடாமல் காப்பவள் பெண் ; இவ்விரு செயல்களர் லும் இல்லத்திற்கு உரிய புகதைச் சேர்ப்பவள் பெண் : சேர்க்கப்பட்ட புகழ் நீங்காம்ல் காப்பவள் பெண் காப்ப தோடு உள்ளம் தளராதிருப்பவள் பெண். இத்தகுதிகள் பெற்றவள்தான் எடுத்துக்காட்டிற்குரிய பெண். அறிக மகளே ! :ఖమ్స్లో: :::::: - -
  • தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.