பக்கம்:வழிகாட்டி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வழிகாட்டி

... ... ... ... ... ...ஒருகை நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட

(ஒரு கையானது நீல நிற வானத்திலிருந்து மிக்க மழையைப் பொழியும்படியாகச் செய்ய, மற்றொரு கை தேவப் பெண்களுக்கு மணமாலையைச் சூட்ட.)

இவ்வாறு முருகன் ஆறு திருமுகங்களுக்கு ஏற்ற படி பன்னிரண்டு திருக்கரங்களால் அருட் செயல் களைப் புரிகின்றான். -

ஆங்கப், பன்னிரு கையும் பாற்பட இயற்றி. (அவ்வாறு அந்தப் பன்னிரண்டு திருக்கரங்களும் முகங் களுக்கு ஏற்ற வகையிலே பொருந்தச் செயல்களைச் செய்து.)

முருகன் வருகை ஆறு முகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் படைத்த முருகன் எழுந்தருளுகின்றான். வான வீதி வழியே வருகின்றான். அந்தர துந்துமிகள் முழங்கு கின்றன. நல்ல வயிரத்தையுடைய கொம்புகள் ஒலிக் கின்றன. வெள்ளிய சங்குகள் நரலுகின்றன. பலமாக இடியைப் போல வெற்றி முரசு முழங்குகின்றது. வெற்றிக் கொடியிலே பல கண்களோடு விளங்கும் தோகையைப் பெற்ற மயிலும் அவன் ஆணையாலே அகவுகின்றது.

அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிர்எழுந்து இசைப்ப வால்வளை ஞரல உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/100&oldid=643704" இலிருந்து மீள்விக்கப்பட்டது