பக்கம்:வழிகாட்டி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவினன்குடி 105

நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர,

(புகையை முகந்தாற் போன்ற மெல்லிய அழுக்கு இல்லாத தூய உடையையும், மொட்டு அவிழ்ந்த மாலையை அணிந்த மார்பையும் உடையவர்களும், காதிலே பொருத்தி வைத்துப் பார்த்துச் சுருதி கூட்டிய நரம்புக்கட்டையுடைய நல்ல யாழிலே பயிற்சியுடை யவர்களும், அன்புடைய நெஞ்சையும் மெல்லிய மொழிகளையும் உடையவர்களும் ஆகிய கந்தருவர் இனிய நரம்பை மீட்டிப் பாட. -

தகை-மாலை. ஆகம்-மார்பு. திவவு-நரம்புக் கட்டு. நயன்-அன்பு.)

கந்தருவர் பாட அவர் பாட்டானது தனிப்பட நில் லாமல் அவர் மகளிரும் கலந்து கொண்டமையாலே இணைந்து மறுவின்றி விளங்குகின்றது. அந்த மகளிர் உடம்பு மனித சாதிக்குரிய நோயொன்றும் இல்லாமல் வளப்பமாக வளர்ந்தது. மேனிநிறம் மாந்தளிரைப் போல ஒளிர்கிறது. இடையிடையே உள்ள அழகுத்தேமல் பொன்னை உரைத்தாற்போலப் பொலிகின்றது. பார்க்கப் பார்க்கக் கண்ணைக் கவரும் ஒளியையுடைய பதினெட்டு வடங்களையுடைய மேகலையை இடையிலே அணிந் திருக்கிறார்கள். உரிய இலக்கணப்படி தாழ்ந்தும் மேலிட்டும் அமைந்த இரகசியத்தானத்தை மறைத்துக் கொண்டு அந்த மேகலை ஒளிர்கிறது. இத்தகைய மகளிரும் பாடுகின்றனர். இருவர் பாட்டும் சேர்ந்து குற்ற மில்லாமல் உயர்ந்து விளங்குகின்றன.

நோயின்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/107&oldid=643718" இலிருந்து மீள்விக்கப்பட்டது