பக்கம்:வழிகாட்டி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வழிகாட்டி

தெற்கிலே யமனும், மேற்கிலே வருணனும், வடக் கிலே குபேரனும் காவல் புரிவர். இந்த நாற்பெருந் தெய்வத்துக் காவலிலே மக்களெல்லாம் நல்ல நகர் களிலே வாழ்கிறார்கள். அப்படி நல்ல நகர்கள் நிலை பெற்ற இந்தப் பூவுலகத்தைத் தம் தொழிலால் காத்து ஒருமைப்படத் தொழில் புரிபவர்கள் மும்மூர்த்திகள். யாவரினும் சிறந்தவர்களென்று பலரும் புகழும் அந்த மூவரும் தலைமை தாங்கி உலகத்தை நடத்துகிறார்கள். அவருள் ஒருவன் சிறைப்பட்டதால் அவன் தலைமை மாத்திரம் போகவில்லை; மூவர் தலைமையுமே போய் விட்டன. இப்போது பழையபடியே அந்த மூவரும் தலைவராக வேண்டும். அதற்குரிய உபாயத்தைச் செய் யவே அந்த மூவரும் புறப்பட்டிருக்கிறார்கள்.

நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக. (நான்கு பெரிய தெய்வங்களின் பாதுகாப்பை உடையதும் நல்ல நகரங்கள் நிலைபெற்றதுமாகிய உலகத்தைப் பாதுகாக்கும் ஒன்றுபட்ட சங்கற்பத்தை உடையவர்களும் பலராலும் புகழப்பெறுபவர்களு மாகிய அயன் அரி அரன் என்னும் மூவரும் பழைய படியே தலைவராகும் பொருட்டு.

கொள்கை - மேற்கொள்ளுதல்.)

இந்த மூவரும் வருவதற்கு வியாஜம் நான் முகனைச் சிறையினின்றும் விடுவித்தல். தங்களுக்கு இன்பத்தை மிகுவிக்கும் இப்பூவுலகத்திற்கு வந்து முருகனைத் தரிசிக்கிறார்கள். தாமரையிலே தோன்றிய னும் கேடில்லாத நீண்ட ஆயுளைப் பெற்றவனுமாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/112&oldid=643731" இலிருந்து மீள்விக்கப்பட்டது