பக்கம்:வழிகாட்டி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுதோறாடல் 125

மாக மெல்ல மெல்ல வருகின்றனவோ என்று எண்ணும்படியாக இருக்கிறது.

இத்தகைய மடநடை மகளிரோடு முருகன் வரு கிறான்.

விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வாலினர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு. (விரலால் வலிய மலர்த்துதலாலே மலர்ந்தனவும் வெவ்வேறு வகையாக இருப்பனவும் காம்போடு கூடி மணம் வீசுகின்றனவும் ஆழமான சுனைகளிலே மலர்ந் தனவும் வண்டுகள் மொய்ப்பனவுமாகிய மலர்களா லான கண்ணி, இரட்டையாகக் கட்டிய மலர் மாலை யால் அணைத்துக் கட்டிய கூந்தல், முடித்திருக்கின்ற கஞ்சாவின் இலையொடு கூடிய மணமுடைய பூ - இவற்றை அணிந்து, சிவந்த அடிமரத்தை உடைய வெண்கடம்பின் வெள்ளையான பூங்கொத்துக்களை இடையிலே வைத்து வண்டு வந்து உண்ணும்படியாக மலர்களையும் சேர்த்துத் தொடுத்தாலும் மிக்க குளிர்ச் சியை உடையதுமாகிய பெரிய தழையாடையைக் குற்ற மறத் திருந்திய வடங்களையுடைய இரகசிய ஸ்தானத் தில் அசையும் படியாக உடுத்து மயிலைக் கண்டாற் போன்ற தோற்றத்தைப் பெற்ற மெத்தென நடக்கும் நடையையுடைய மகளிரொடு - முருகன் வருகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/127&oldid=643768" இலிருந்து மீள்விக்கப்பட்டது