பக்கம்:வழிகாட்டி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுதோறாடல் 127

(சிவந்த நிறமுடையவன், சிவந்த ஆடையை அணிந்தவன், சிவந்த அடிமரத்தை உடைய அசோகினது குளிர்ந்த தளிர் அசைகின்ற காதை உடையவன், கச்சை அணிந்தவன், கழலைக் கட்டியவன், வெட்சிக்கண்ணி யைச் சூடியவன், குழலை ஊதுபவன், கொம்பை வாசிப்பவன், வேறு பல சிறிய வாத்தியங்களை இசைப் பவன், ஆட்டு வாகனத்தான், மயிலில் ஏறுபவன், குற்றம் இல்லாத சேவற் கொடியைப் பிடித்தவன், நெடிய உருவம் படைத்தவன், வளை அணிந்த தோளை உடையவன் - ஆக முருகன் எழுந்தருள்கிறான்.

அரை - அடிமரம். செயலை - அசோகமரம். துயல் வரும் - அசையும். செச்சை - வெட்சி. கோடு - கொம்பு. தகர் - ஆடு. புகர் - குற்றம்.)

சிங்கார வடிவேலன் இப்படி வரும் போது அவனுடன் சேவிக்கும் மகளிர் வந்ததுபோலப் பாடும் மகளிரும் வருகின்றனர். அவர்கள் பாடிக்கொண்டே அவனுடன் வருகிறார்கள். அவர்கள் பாடுகிறார்களோ அல்லது வீணையை யாரேனும் வாசிக்கிறார்களோ என்று சொல்லும்படியாக இருக்கிறது அவர்களுடைய இனிய குரல்.

நரம்புஆர்த் தன்ன இன்குரல் தொகுதியோடு.

(யாழ் நரம்பு ஒலித்தாற் போன்ற இனிய குரலை யுடைய மகளிர் கூட்டத்தோடு - முருகன் வருகிறான்.)

முருகன் இடையிலே உடுத்திருக்கும் துகிலில் சிறிய சிறிய புள்ளிகள் இருக்கின்றன. மிகவும் மெல்லிய துகில் அது; குளிர்ச்சியும் மணமும் அமைந்து விளங்குவது. அதைப் பூமியிலே படும்படியாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/129&oldid=643774" இலிருந்து மீள்விக்கப்பட்டது