பக்கம்:வழிகாட்டி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதி ர்சோலை 139

வழிபடத் தொடங்கினாள். அதனால் அவளுக்குச் சிறப் பாக வரும் பயன் ஒன்றும் இல்லை. ஆகவே அவள், மரங்கள் செறிந்து அடர்ந்த மலைப் பக்கங்களிலுள்ள நல்ல ஊர்களெல்லாம் பசியும் பிணியும் பகையும் நீங்கி இன்புற்று வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறாள்; தூபம் கொடுத்துக் குறிஞ்சிப் பண்ணைப் பாடுகிறாள். அவள் குறிஞ்சிப் பண்ணைப் பாடும்பொழுது குறிஞ்சி நிலத்து இசைக்கருவிகளெல்லாம் உடன் ஒலிக்கின்றன. அருகில் உள்ளவர்கள் அவற்றை வாசிக்கின்றனர். இயற் கையாகவே மலையில் வீழும் அருவியின் ஒசை மலை யழகனாகிய முருகனுக்குரிய வாத்தியமாக அமைந்திருக் கிறது. அந்த ஓசையே சுருதியாகப் பல வாத்தியங்கள் ஒலிக்கின்றன. அந்த முழக்கத்தினிடையே குறமகள் தன்னுடைய இன்னொலியால் குறிஞ்சிப் பண்ணைப் பாடுகிறாள்.

நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க. (செறிந்த மலைச்சாரலில் உள்ள நல்ல நகர்களை வாழ்த்தி, நறிய தூபத்தைக் காட்டி, குறிஞ்சிப் பண்ணைப் பாடி, ஒலிக்கின்ற இன்னொலியை உடைய அருவியொடு இனிய வாத்தியங்கள் சேர்ந்து முழங்க.)

குறமகள் பல நிறம் பெற்ற மலர்களைத் தூவுகி றாள்; இரத்தத்தோடு கலந்த சிவந்த தினையைப் பரப்பு கிறாள். அதைப் பார்த்தாலே பயமுண்டாகிறது. முருகனுக்கு உவப்பான தொண்டகப் பறை, துடி முதலியவற்றை வாசிக்கச் செய்கிறாள்.

தெய்வ நினைவை, அதிலும் முருகனது நினைவை உண்டாக்கும் காட்சி, ஒலி, மணம் அங்கே நிறைந்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/141&oldid=643802" இலிருந்து மீள்விக்கப்பட்டது